கவின் மலரின்,.. சமுகவியல் அறிஞர் காஞ்சா அய்லைய்யா தொடர்பான
மிக நேர்த்தியான மொழி பெயர்ப்புக்கும் -பதிவிற்கும் வாழ்த்துக்கள் , நன்றி .
சில வருடங்களுக்கு முன்...... இலக்கில்லாத ஒரு பயணத்தின் போது, அந்த எட்டாவது அதிசயம் நிகழ்ந்தது.
கர்நாடகா மாநிலம், துங்க்பூரிலிருந்து - பெங்களூர் வரை திரு. காஞ்சா அய்லைய்யா -வுடன் தனியே பயணப்படும் பேறு வாய்த்தது.
"நீங்கள் எழுதிய புத்தகங்களில் சிலவற்றின் மொழிபெயர்ப்பை வாசித்திருக்கிறேன்" என்றேன். சில சந்தேகங்களை கேட்டேன். அதனை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போலும். ஆர்வமாய் எனது இரு கைகளையும் வாஞ்சையாய் பற்றிக்கொண்டார். அத்தனை பெருமிதம் அவர் முகத்தில்.
இவை முக்கியமில்லை. ஆனால் அன்று அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டவை இன்றும் மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது.
அந்தப் பயணத்தின்போது "இந்தியாவின் தேசிய அடையாளங்களைப் பற்றிய பேச்சு வந்தது! சிரித்துக் கொண்டே சொன்னார் திரு, அய்லைய்யா.
"நமது தேசிய பறவையாக மயிலையும்,
தேசிய விலங்காக புலியையும் தேர்வு செய்து அதனை கொண்டாடுவது மடத்தனமானது.
எந்த விதத்திலும் பிரயோஜனமில்லாத - அர்த்தம் இல்லாத ஜீவராசிகள் இவை" என்றார்.
"பின் எவை இருந்தால் சரி" என்று கேட்டேன்.
" தேசிய பறவையாக காக்கையும், தேசிய விலங்காக எருமையையும் இந்திய அரசு அறிவித்திருக்க வேண்டும்" என்றார் திரு. காஞ்சா அய்லைய்யா
"ஏன்" என்றேன்.
" சமூகத்தின் சம்பளம் வாங்காத துப்புரவு தொழிலாளி வேலை பார்க்கிறது காக்கை !
லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து காப்பாற்றுகிறது எருமை மாடுகள்!.
இவை இரண்டுமே ”கருப்பு” நிறத்தில் பிறந்துதான் பிரச்சனை.
இவை வெள்ளை நிறத்திலோ அல்லது வேறு நிறத்திலோ இருந்திருந்தால் ஒருவேளை அங்கீகரிக்கப் பட்டிருக்கக் கூடும். அதற்குரிய மரியாதையை கிடைத்திருக்கும் என்று நினைக்கிறன் " என்றார் காஞ்சா அய்லைய்யா.
எத்தனை சத்தியமான ஆனால் சாத்தியமாகாமல் போன உண்மை இது.
இன்றுவரை எங்காவது காக்கையையும் -எருமையையும்
பார்க்கும் போதெல்லாம் ..
அய்லைய்யா வின் புன்னகை தவழும் முகம்
நினைவில் மலர்வதை தவிர்க்க முடியவில்லை!!.
நீங்களிருவரும் சுருங்கப்பேசி இருந்தாலும் இந்தியாவின் முழுமையான ஆதிக்க அரசியலைப் பேசி இருக்கிறீர்கள், வர்ணபேத அரசியல் இன்னும் இந்தியாவில் தொடரத்தான் செய்கிறது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, தென் நாடுடைய சிவனே போற்றி- சம்பந்தர் அப்போதே தெளிவாக இருந்திருக்கிறார்,
ReplyDeleteகருப்பு எந்த நாட்டிலும் அப்படித்தான்
ReplyDeleteகருப்பாயிருப்பவர்கள் தான் இதை கொண்டாடி கத்தி கொண்டிருக்க வேண்டும் என்னை போல்
எத்தனை சத்தியமான ஆனால் சாத்தியமாகாமல் போன உண்மை இது-நல்ல பதிவு.
ReplyDeleteநமக்கு செளகர்யமானவைகளை சாத்தியமாக்கிவிடுகிறோம்.சங்கடமானவைகளை தள்ளி விடுகிறோம்.
நீங்கள் இருவரும் எதை நினைத்து பேசினீர்கள் என்று தெரியாது. ஆனால் எது எதையோ நினைத்து பேசியதாக நினைக்கத் தூண்டும் கட்டுரை.
ReplyDelete